உக்ரைனில் இருந்து நாயை விமானத்தில் அழைத்து வந்த பெங்களூரு மாணவர்
உக்ரைனில் இருந்து நாயை பெங்களூரு மாணவர் விமானத்தில் அழைத்து வந்தார்.
பெங்களூரு:
உக்ரைனில் போர் நிலவி வரும் நிலையில் அங்கு வசித்து வந்த இந்திய மாணவர்கள் தற்போது நாடு திரும்பி வருகின்றனர். இவ்வாறு வரும் மாணவர்கள் உக்ரைனில் தாங்கள் வளர்த்து வந்த செல்ல பிராணிகளையும் அழைத்து வருகின்றனர். மைசூரு, மங்களூருவை சேர்ந்த 2 மாணவிகள் தங்கள் வளர்த்து வந்த பூனையை விமானத்தில் கொண்டு வந்தனர். இந்த நிலையில் உக்ரைனில் இருந்து தற்போது டெல்லிக்கு வந்து உள்ள பெங்களூருவை சேர்ந்த மருத்துவ மாணவர் ரஞ்சித் ரெட்டி என்பவர் தான் வளர்த்து வந்த நாயையும் விமானத்தில் அழைத்து வந்து உள்ளார். இதுகுறித்து டெல்லியில் ரஞ்சித் ரெட்டி நிருபர்களிடம் கூறும்போது:-
நான் இந்த நாயை கடந்த 1½ ஆண்டுகளாக வளர்த்து வருகிறேன். இந்த நாய் அதிக குளிர் இருக்கும் இடத்தில் வசிக்கும் தன்மை கொண்டது. கொஞ்சம் தட்பவெட்ப நிலை மாறினாலும் இந்த நாய்க்கு உடல்நலம் பாதிக்கப்படும். பெங்களூருவில் தற்போது நல்ல வெயில் அடித்து வருகிறது. இதனால் எனது வீட்டில் அதிநவீன குளிர்சாதன எந்திரம் வாங்கி பொருத்த உள்ளேன். விமானத்தில் இந்த நாயை கொண்டு வர எனக்கு அனுமதி மறுக்கப்பட்டது. மாணவர்களை மீட்க வந்திருந்த மத்திய மந்திரி ஹர்தீப்சிங் பூரியிடம் அனுமதி பெற்று விமானத்தில் எனது செல்ல நாயை அழைத்து வந்தேன். தற்போது போர் நிலவி வரும் நிலையில் உக்ரைனில் இந்த நாயை விட்டு வர எனக்கு மனது இல்லை. அதனால் என்னுடன் அழைத்து வந்தேன் என்று கூறினார்.
Related Tags :
Next Story