நாகர்கோவிலில் பரிதாபம் குப்பையை எரித்த போது தீயில் கருகி தொழிலாளி சாவு


நாகர்கோவிலில் பரிதாபம் குப்பையை எரித்த போது தீயில் கருகி தொழிலாளி சாவு
x
தினத்தந்தி 8 March 2022 2:23 AM IST (Updated: 8 March 2022 2:23 AM IST)
t-max-icont-min-icon

நாகர்கோவிலில் குப்பைகளை எரித்த போது தீயில் கருகி தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

நாகர்கோவில், 
நாகர்கோவிலில் குப்பைகளை எரித்த போது தீயில் கருகி தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
தொழிலாளி
ஆசாரிபள்ளம் குருசடி வடக்கு தெருவை சேர்ந்தவர் ஜான் பிரான்சிஸ் (வயது 61), தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் வீட்டின் முன்பு ஓலை மற்றும் பேப்பர் உள்ளிட்ட குப்பைகளை தீ வைத்து எரித்து கொண்டிருந்தார். அப்போது குப்பையில் எரிந்த தீ, திடீரென ஜான் பிரான்சிஸ் அணிந்திருந்த ஆடையில் பற்றியது. தொடர்ந்து தீ மள..மள... வென எரிந்து உடல் முழுவதும் பரவியது. தீயின் வெப்பம் தாங்க முடியாமல், ஜான் பிரான்சிஸ் அலறினார். அவரது அபாய குரல் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து, அவர் மீது பற்றி எரிந்த தீயை அணைத்தனர். 
பரிதாப சாவு
தொடர்ந்து படுகாயம் அடைந்த ஜான் பிரான்சிசை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு அஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்தில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். 
இதுகுறித்த புகாரின்பேரில் ஆசாரிபள்ளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story