காரைக்குடி முத்துமாரியம்மன் கோவில் பால்குட விழா
காரைக்குடி முத்துமாரியம்மன் கோவில் பால்குட விழா:வீதிகளை சுத்தம் செய்யும் பணி தொடக்கம்
காரைக்குடி,
காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோவிலில் மாசி-பங்குனி திருவிழா இன்று தொடங்கி 10 நாட்கள் வரை சிறப்பாக நடைபெற உள்ளது. இதையொட்டி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பால்குட விழா வருகிற 16-ந்தேதி நடைபெற உள்ளது. அன்றைய தினம் லட்சக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து காரைக்குடி முத்தாலம்மன் கோவிலில் இருந்து பால்குடம் எடுத்து வந்து நகரின் முக்கிய வீதிகள் வழியாக வந்து முத்துமாரியம்மன் கோவிலுக்கு வருவது வழக்கம். இதையடுத்து பால்குடம் எடுத்து வரும் முக்கிய வீதிகளை சுத்தம் செய்வதற்கான ஆய்வு பணி நகராட்சி சார்பில் நடைபெற்றது. இந்த பணியை நகராட்சி தலைவர் முத்துதுரை பார்வையிட்டு தொடங்கி வைத்தார். விழாவில் நகராட்சி ஆணையாளர் லெட்சுமணன் மற்றும் கவுன்சிலர்கள், நகராட்சி அதிகாரிகள் உள்பட பலர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story