புகார் பெட்டி


புகார் பெட்டி
x
தினத்தந்தி 8 March 2022 2:27 AM IST (Updated: 8 March 2022 2:27 AM IST)
t-max-icont-min-icon

புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்

புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
சேதமடைந்த சாலை
மதுரை ஆரப்பாைளயம் கிராஸ்ரோடு செக்கடிதெரு நுழைவு பகுதியில் உள்ள சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக  காணப்படுகிறது. இதனால் இந்த சாலை வழியாக வாகனங்களில் செல்வோர் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். மேலும் மழைகாலங்களில் கழிவுநீர் சாலையில் தேங்குவதால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.  இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.         
தொற்றுநோய் பரவும் அபாயம் 
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் மூர்த்திநகர் பகுதியில் கழிவுநீர்கால்வாய் கட்டுவதற்காக தோண்டப்பட்ட பள்ளம் முறையாக மூடப்படாததால் அந்த பகுதியில் கழிவுநீர் ேதங்கியுள்ளது. இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதோடு கொசுக்கள் உருவாகி தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கழிவுநீர்கால்வாயை சீரமைப்பதுடன், பள்ளத்தை மூடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
பயணிகள் நிழற்குடை தேைவ
மதுரை செல்லூர் பாலம் ஸ்டேஷன் ரோடு எல்.ஐ.சி. பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்கூடை இல்லை. அதனால் பஸ்சிற்காக காத்திருக்கும் முதியோர்களும், கர்ப்பிணிகளும் மிகவும் சிரமப்படுகின்றனர். நீண்ட நேரம் வெயிலில் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. எனவே பயணிகள் நிழற்குடை அமைக்க சம்பந்தபட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
போக்குவரத்து நெரிசல்
ராமநாதபுரம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை செல்லும் ரோட்டில் சாலைகளின் இருபுறமும் வாகனங்கள் நிறுத்தப்படுவதால் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் இந்த வழியாக நடந்து செல்பவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே சாலையோரங்களில் வாகனங்களை நிறுத்தாமல் இருக்க  சம்பந்தப்ட்ட அதிகாரிகள்  உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.          
மாசடைந்த குடிநீர் 
மதுரை 86-வது வார்டுக்கு உட்பட்ட மணிகண்டன் நகரில் குடிநீருடன் கழிவுநீரும் கலந்து வருவதால் அதனை உபயோகப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் இதனால் நோய் தொற்று ஏற்படும் நிலை உள்ளது. எனவே சம்பந்தபட்ட அதிகாரிகள் குடிநீருடன் கழிவுநீர் கலப்பதை தடுக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Next Story