வில் வித்தை போட்டி: கீழக்கரை பள்ளி மாணவர்கள் சாதனை
வில் வித்தை போட்டி: கீழக்கரை பள்ளி மாணவர்கள் சாதனை
கீழக்கரை
ராமநாதபுரத்தில் பள்ளி மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான வில்வித்தைப் போட்டி நடைபெற்றது. இதில் கீழக்கரை இஸ்லாமியா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் மாணவர்கள் பெருவாரியான போட்டிகளில் வெற்றி பெற்று சுழற்கோப்பையை கைப்பற்றினர். 10 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் தினிஷ்டா 2-வது பரிசும், அப்துல் ஹன்னான் 3- வது பரிசும், பாத்திமா அப்ஸுன் 5-வது பரிசும், பெற்றனர். 12 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் ஷேக் அப்துல் காதர் முதலாம் பரிசும், ஹாஜா பாத்திமா 2-வது பரிசும், ஸ்வேதா 3-வது பரிசும் பெற்றனர். 14 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் மாணவி சந்தியா முதல் பரிசை பெற்றார். வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளையும். பயிற்சி அளித்த ஆசிரியையும் இஸ்லாமியா பள்ளி நிறுவனர் தலைவர் முஹைதீன் இப்ராகிம் மற்றும் பள்ளி முதல்வர் மேபெல் ஜெஸ்ட் ஆகியோர் பாராட்டினர்.
Related Tags :
Next Story