போர் பதற்றத்துக்கு மத்தியில் உக்ரைன் சென்று 242 இந்தியர்களை மீட்டு வந்த கர்நாடக பெண் விமானி
போர் பதற்றத்துக்கு மத்தியில் உக்ரைன் சென்று 242 இந்தியர்களை கர்நாடக பெண் விமானி மீட்டு வந்தார். அவருக்கு பாராட்டுகள் குவிகிறது.
பாராட்டுகள் குவிகிறது
பெங்களூரு:
உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து உள்ள நிலையில் அங்கு சிக்கி தவித்து வரும் இந்தியர்களை ‘ஆபரேஷன் கங்கா’ என்ற பெயரில் மத்திய அரசு சிறப்பு விமானங்களை கொண்டு மீட்டு வருகிறது. இதுவரை 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள், உக்ரைனில் இருந்து மீட்டு வரப்பட்டுள்ளனர். இந்த நிலையில் கடந்த மாதம் (பிப்ரவரி) 22-ந்தேதி போர் தொடங்கும் முன்பு, கடும் பதற்றத்துக்கு மத்தியில் இந்திய சிறப்பு விமானம் உக்ரைன் சென்று 242 இந்தியர்களை மீட்டு டெல்லி அழைத்து வந்தது. இந்த விமானத்தை 5 விமானிகள் இயக்கியுள்ளனர். அவர்களில் ஒருவர் திஷா மன்னூர். இவர் கர்நாடகத்தை சேர்ந்த மருமகள்.
அதாவது, குஜராத்தை பூர்வீகமாக கொண்ட இந்த திஷா, கர்நாடக மாநிலம் பெலகாவியை சேர்ந்த ஆதித்யா மன்னூர் என்ற விமானியை கடந்த 2015-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். தற்போது விமானிகளான ஆதித்யா-திஷா டெல்லியில் வசித்து வருகின்றனர். உக்ரைனில் இருந்து 242 இந்தியர்களை மீட்டு வந்த கர்நாடக பெண் விமானிக்கு பாராட்டுக்கள் குவிய தொடங்கிவிட்டது. இந்நிலையில் உக்ரைன் பயணம் குறித்து திஷா கூறியதாவது:-
‘உக்ரைனுக்கு இயக்கப்பட்ட சிறப்பு விமான ஒன்றில் நான் உள்பட 5 பேர் சென்றோம். எங்களுடன் வந்த பிற விமானங்கள் புடாபெஸ்ட், புகாரெஸ்டில் தரையிறங்கியது. நாங்கள் இருந்த விமான உக்ரைனின் தலைநகர் கீவில் தரையிறங்கியது. போர் பதற்றத்துக்கு மத்தியில் அங்கு உயிருக்காக போராடிய மாணவர்களை பத்திரமாக மீட்டு டெல்லி அழைத்து வந்தோம், அனைவர் மத்தியிலும் மரண பீதி இருந்தது. இருப்பினும் நாங்கள் அதை பொருட்படுத்தாமல், கொடுத்த வேலையை சிறப்பாக செய்துமுடிந்தோம். வாழ்நாளில் இந்த பயணத்தை மறக்க முடியாது’ என்று கூறினார்.
Related Tags :
Next Story