போலீசார் மீது தம்ளரை வீசிய டீக்கடை ஊழியர் கைது
காவல்கிணறு விலக்கு பகுதியில் போலீசார் மீது தம்ளரை வீசிய டீக்கடை ஊழியர் கைது செய்யப்பட்டார்.
பணகுடி:
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று விட்டு, மதியம் நெல்லை வழியாக கன்னியாகுமரி மாவட்டத்துக்கு காரில் சென்றார். இதையொட்டி வழிெநடுகிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
அப்போது காவல்கிணறு விலக்கு பகுதியில் உள்ள டீக்கடையில் கூட்டம் அதிகமாக இருந்தது. இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த உவரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் மற்றும் போலீசார், அந்த டீக்கடையில் கூட்டமாக நிற்கக்கூடாது என்று அறிவுறுத்தினர்.
இதனால் ஆத்திரம் அடைந்த டீக்கடை ஊழியரான காவல்கிணறு அந்தோணியார் கோவில் தெருவைச் சேர்ந்த பாஸ்கர் (வயது 62) போலீசாரை அவதூறாக பேசி, பணி செய்ய விடாமல் தடுத்து, கண்ணாடி தம்ளரை தரையில் போட்டு உடைத்து கொலைமிரட்டல் விடுத்தார். மேலும் சில்வர் தம்ளரை போலீசார் மீது தூக்கி வீசினார்.
இதுகுறித்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் பணகுடி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் பாஸ்கர் மீது இந்திய தண்டனை சட்டம் 294 (பி), 186, 353, 506 (2) உள்ளிட்ட பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர்.
Related Tags :
Next Story