கிராமத்திற்கு அடிப்படை வசதி கேட்டு சபாநாயகருக்கு ரத்தத்தில் கடிதம் எழுதிய விவசாய சங்க தலைவர்


கிராமத்திற்கு அடிப்படை வசதி கேட்டு சபாநாயகருக்கு ரத்தத்தில் கடிதம் எழுதிய விவசாய சங்க தலைவர்
x
தினத்தந்தி 8 March 2022 2:44 AM IST (Updated: 8 March 2022 2:44 AM IST)
t-max-icont-min-icon

கிராமத்திற்கு அடிப்படை வசதி கேட்டு சபாநாயகருக்கு விவசாய சங்க தலைவர் ரத்தத்தில் கடிதம் எழுதினார்.

கலபுரகி:

கலபுரகி மாவட்டம் கலகி தாலுகாவில் ரதகல் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் பல ஆண்டுகளாக குடிநீர், சாலை, கழிவறை உள்ளிட்ட எந்தவித அடிப்படை வசதியும் இல்லை. தங்களது கிராமத்திற்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் பல முறை கோரிக்கை விடுத்தும் மக்கள் பிரதிநிதிகள், அதிகாரிகள் யாரும் கண்டுகொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.

  இந்த நிலையில் ரதகல் கிராமத்திற்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்கும்படி கர்நாடக சட்டசபை சபாநாயகர் காகேரிக்கு, ரதகல் கிராமத்தில் வசித்து வரும் கலகி தாலுகா விவசாயிகள் சங்க தலைவரான சரணபசப்பா என்பவர் தனது ரத்தத்தின் மூலம் கடிதம் எழுதி அனுப்பி வைத்து உள்ளார். அதில், தங்களது ஊரின் அவலநிலை குறித்தும், அடிப்படை வசதிகளை உடனே செய்து தர கோரியும் அவர் குறிப்பிட்டுள்ளார். அவர் ரத்தத்தில் எழுதிய கடிதம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Next Story