கல்லூரி மாணவர் குளத்தில் மூழ்கி சாவு
கள்ளிக்குடி அருகே குளத்தில் மூழ்கி கல்லூரி மாணவர் பரிதாபமாக இறந்தார்.
திருமங்கலம்,
மதுரை வில்லாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன். இவருடைய மகன் லேகேஸ்வரன் (வயது 18). இவர் மதுரையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பொறியியல் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.கள்ளிக்குடி அருகே உள்ள ஓடப்பட்டியிலுள்ள உறவினர் வீட்டுக்கு கோவில் திருவிழாவுக்காக வந்திருந்தார். பின்னர் கோவிலுக்கு சாமி கும்பிட சென்றிருந்தார். அப்போது அங்குள்ள குளத்தில் குளிக்கச் சென்ற அவர் எதிர்பாராதவிதமாக குளத்தில் மூழ்கி இறந்தார். இது குறித்து கள்ளிக்குடி போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story