குளத்தில் மூழ்கி தொழிலாளி சாவு


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 8 March 2022 3:14 AM IST (Updated: 8 March 2022 5:20 AM IST)
t-max-icont-min-icon

பணகுடியில் குளத்தில் மூழ்கி தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

பணகுடி,

பணகுடி சிவகாமிபுரம் காந்தி மேலத்தெருவை சேர்ந்த செல்லத்துரை மகன் மணிகண்டன் (வயது 37). ஒலிபெருக்கி கடையில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணம் முடிந்து மனைவியும், ஒரு மகள் மற்றும் 2 மகன்கள் உள்ளனர்.

இந்த நிலையில் சம்பவத்தன்று மதியம் லெப்பைகுடியிருப்பு ஊருக்கு மேற்கே உள்ள காரியாபுதுக்குளத்தில் குளிக்க சென்ற அவர் எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கினார். பக்கத்தில் குளித்தவர்கள் மணிகண்டனை தேடினார்கள். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை. தகவல் அறிந்ததும் வள்ளியூர் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து மண்கண்டனை பிணமாக மீட்டனர். பணகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

Next Story