மாட்டு வண்டியில் அதிக பாரம் ஏற்றப்பட்டதால் மாடு கீழே விழுந்தது


மாட்டு வண்டியில் அதிக பாரம் ஏற்றப்பட்டதால் மாடு கீழே விழுந்தது
x
தினத்தந்தி 8 March 2022 3:15 AM IST (Updated: 8 March 2022 3:15 AM IST)
t-max-icont-min-icon

மாட்டு வண்டியில் அதிக பாரம் ஏற்றப்பட்டதால் மாடு கீழே விழுந்தது.

ஈரோடு
ஈரோடு மாநகர் பகுதியில் பொருட்களை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு கொண்டு செல்வதற்கு மாட்டு வண்டிகள் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. ஈரோடு மூலப்பட்டறை பார்க்ரோடு பகுதியில் உள்ள ஒரு பார்சல் அலுவலகத்தில் இருந்து பொருட்கள் மாட்டு வண்டியில் ஏற்றப்பட்டன. 
அப்போது அதிக பாரம் ஏற்றப்பட்டதால் நிலைக்குலைந்த மாடு திடீரென கீழே விழுந்தது. அதன்பிறகு வண்டியில் இருந்து பாரம் இறக்கப்பட்டது. ஆனாலும் சிறிது நேரம் சோர்வாக காணப்பட்ட மாடு எழுந்திருக்காமல் அங்கேயே இருந்தது. அதன்பிறகு மாட்டை அதன் உரிமையாளர் மாட்டு வண்டியில் பொருத்தி பொருட்களை ஏற்றி சென்றார். இந்த சம்பவத்தால் அங்கு சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story