அந்தியூரில் ரூ.3 லட்சத்துக்கு வெற்றிலை விற்பனை


அந்தியூரில் ரூ.3 லட்சத்துக்கு வெற்றிலை விற்பனை
x
தினத்தந்தி 8 March 2022 3:19 AM IST (Updated: 8 March 2022 3:19 AM IST)
t-max-icont-min-icon

அந்தியூரில் ரூ.3 லட்சத்துக்கு வெற்றிலை விற்பனையானது.

அந்தியூர்
அந்தியூர் வாரச்சந்தையில் நேற்று வெற்றிலை ஏலம் நடைபெற்றது. அந்தியூர், அத்தாணி, ஆப்பக்கூடல், காட்டுப்பாளையம், வெள்ளாளபாளையம் உட்பட பல்வேறு பகுதியிலிருந்து விவசாயிகள் வெற்றிலையை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தார்கள்.
100 எண்ணிக்கை கொண்ட ஒரு கட்டு ராசி வெற்றிலை 80 ரூபாய் முதல் 100 ரூபாய் வரையும், பீடா வெற்றிலை 40 ரூபாய் முதல் 50 ரூபாய் வரையும், செங்காம்பு வெற்றிலை ஒரு கட்டு 5 ரூபாய்க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.3 லட்சத்துக்கு விற்பனையானது. 
ஈரோடு, பெருந்துறை, பொள்ளாச்சி, திருப்பூர், கோவை, சத்தியமங்கலம் ஆகிய பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் வெற்றிலையை வாங்கிச்சென்றார்கள். 

Next Story