ஏற்காட்டில் கடும் மேக மூட்டத்துடன் சாரல் மழை


ஏற்காட்டில் கடும் மேக மூட்டத்துடன் சாரல் மழை
x
தினத்தந்தி 8 March 2022 3:20 AM IST (Updated: 8 March 2022 3:20 AM IST)
t-max-icont-min-icon

ஏற்காட்டில் கடும் மேக மூட்டத்துடன் சாரல் மழை பெய்தது.

ஏற்காடு:
ஏற்காட்டில் கடந்த சில நாட்களாக பகல் நேரத்தில் கடும் வெயிலும், இரவு நேரத்தில் கடும் பனியுமாக இருந்து வந்தது. இந்த நிலையில் வங்க கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சேலம் மாவட்டத்தில் நேற்று அதிகாலை பல இடங்களில் மழை பெய்தது. இதனால் சேலம்-ஏற்காடு மலைப்பாதையில் கடும் மேக மூட்டம் காணப்பட்டது. இதன் காரணமாக வாகனங்கள் முகப்பு விளக்கு வெளிச்சத்தில் இயக்கப்பட்டன. 
 மேலும் ஆங்காங்கே சாரல் மழை பெய்ய தொடங்கியது. காலை நேரத்தில் பெய்த மழையால் உள்ளூர் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.  எனினும் ஏற்காட்டுக்கு வந்த சுற்றுலா பயணிகள் கடும் மேக மூட்டத்துக்கு மத்தியில் இயற்கை அழகை ரசித்தனர்.

Next Story