கொள்முதல் நிலையம் அமைக்ககோரி விவசாயிகள் போராட்டம்


கொள்முதல் நிலையம் அமைக்ககோரி விவசாயிகள் போராட்டம்
x
தினத்தந்தி 8 March 2022 3:33 AM IST (Updated: 8 March 2022 3:33 AM IST)
t-max-icont-min-icon

சோழவந்தான் அருகே கொள்முதல் நிலையம் அமைக்ககோரி குவித்து வைத்த நெல்குவியல்கள் முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

சோழவந்தான்,

சோழவந்தான் அருகே கொள்முதல் நிலையம் அமைக்ககோரி குவித்து வைத்த நெல்குவியல்கள் முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

நெல் கொள்முதல் நிலையம்

 சோழவந்தான் அருகே கருப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பொம்மன்பட்டி கிராமத்தில் சுமார் 500 ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது.
தற்போது இப்பகுதியில் 150 ஏக்கரில் பயிரிடப்பட்டு உள்ள நெல் அறுவடை செய்யப்பட்டு உள்ளது. இந்த நெல்லை அங்குள்ள கோவில் அருகே குவித்து வைத்து உள்ளனர். அறுவடை செய்த நெல்லை எங்கு சென்று விற்பது என தெரியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர். இப்பகுதியில் நெல் கொள்முதல் நிலையம் இல்லாததால் தனியார் வியாபாரிகள் யாராவது நெல்லை கொள்முதல் செய்வார்களா? என விவசாயிகள் அலைந்து திரிந்து வருகிறார்கள்.
இது குறித்து அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் நெப்போலியன், வெள்ளைச்சாமி ஆகியோர் கூறியதாவது:-
கடந்த ஆண்டும் இப்பகுதியில் அறுவடை செய்த நெல்லை கோவில் முன்பு குவித்து வைத்ேதாம். அப்போது அரசு சார்பில் நெல்லை கொள்முதல் செய்யவரவில்லை. தற்ேபாதும் அறுவடை செய்த நெல்லை குவித்து வைத்து உள்ேளாம். வாங்குவதற்கு யாரும் வரவில்லை. இன்னும் பல இடங்களில் நெல் அறுவடை செய்ய வேண்டிய நிலை உள்ளது.
எனவே குவித்து வைக்கப்பட்டு உள்ள நெல் குவியல்களை அரசு சார்பில் கொள்முதல் செய்ய வேண்டும் என வலியுறுத்தி வருகிறோம். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மழை பெய்தால் குவித்து வைக்கப்பட்டு உள்ள நெல்குவியல் சேதமாகி விடும். எனவே மாவட்ட கலெக்டர், இப்பகுதியில் நெல்கொள்முதல் நிலையம் அமைக்க உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
இந்த நிலையில் அங்கிருந்த விவசாயிகள் சிலர் தாங்கள் குவித்து வைத்திருந்த நெல்குவியல்கள் முன்பு நின்று நெல்கொள்முதல் நிலையம் அமைக்கக்கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலகத்துக்கு மனு கொடுக்க சென்றனர்.

இடைத்தரகர்கள் தலையீடு

இதுகுறித்து சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசனிடம் கேட்டபோது நெல் கொள்முதல் நிலையங்களில் தேங்கியுள்ள நெல்மூடைகள் விரைவில் மாவட்ட கலெக்டரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு நெல் கொள்முதல் செய்யப்படும் என்றும் இடைத்தரகர்களின் தலையீடு இல்லாமல் கொள்முதல் செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.

Next Story