இருதரப்பினர் இடையே மோதல்; கல்வீச்சில் 2 பேர் காயம்


இருதரப்பினர் இடையே மோதல்; கல்வீச்சில் 2 பேர் காயம்
x
தினத்தந்தி 8 March 2022 4:01 AM IST (Updated: 8 March 2022 4:01 AM IST)
t-max-icont-min-icon

திருவேங்கடம் அருகே இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் 2 பேர் காயம் அடைந்தனர்.

திருவேங்கடம்:
திருவேங்கடம் அருகே குறிஞ்சாகுளம் கிராமத்தில் உள்ள கோவிலில் வழிபாடு நடத்துவது தொடர்பாக இரு தரப்பினர் இடையே பிரச்சினை ஏற்பட்டு முன்விரோதம் இருந்தது. இந்த நிலையில் மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியுடன், அந்த கோவில் முன்புள்ள மைதானத்தில் கடந்த மாதம் ஒரு தரப்பினர் விளையாட்டு போட்டிகள் நடத்தினர்.

இதற்கிடையே அந்த மைதானத்தில் அங்கன்வாடி மையம், அரசு ஆரம்ப சுகாதார நிலையம், பஞ்சாயத்து அலுவலகம் கட்ட வேண்டும் என்று வலியுறுத்தி, மற்றொரு தரப்பினர் நேற்று தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்து விட்டு, காரில் திரும்பி வந்தனர்.

அப்போது குறிஞ்சாகுளத்தில் ஒரு தரப்பினர் கட்சி கொடியேற்றியபோது, அவர்கள் மீது சிலர் கல் எறிந்ததாக கூறப்படுகிறது. உடனே பதிலுக்கு அவர்களும் கல் வீசியதில், 2 பேர் காயமடைந்தனர். உடனே போலீசார் விரைந்து சென்று, இருதரப்பினரையும் கலைந்து போகச் செய்தனர். தொடர்ந்து அங்கு போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டு உள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story