செயல்படாத தானியங்கி சிக்னல்


செயல்படாத தானியங்கி சிக்னல்
x
தினத்தந்தி 8 March 2022 4:18 PM IST (Updated: 8 March 2022 4:18 PM IST)
t-max-icont-min-icon

செயல்படாத தானியங்கி சிக்னல்

திருப்பூர் பூலுவப்பட்டி 4 ரோடு சந்திப்பில் தானியங்கி சிக்னல் செயல்படாமல் உள்ளது. இதனால் காலை மற்றும் மாலை நேரங்களில் அங்கு கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதேபோல் மற்ற நேரங்களில் சிக்னல் செயல்படாமல் இருப்பதால் வாகன ஓட்டிகள் தாறுமாறாக செல்கின்றனர். இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே மாநகரின் முக்கிய சந்திப்பாக உள்ள பூலுவப்பட்டி 4 ரோடு சந்திப்பில் தானியங்கி சிக்னல் அனைத்து நேரங்களிலும் சரியாக செயல்படும் வகையிலும், வாகன ஓட்டிகள் அதிக நேரம் காத்திருக்காத வகையிலும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும், அங்கு சாலையின் நடுவே உள்ள மின்கம்பத்தை இடமாற்றம் செய்ய வேண்டும் என்றும் அப்பகுதி மக்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story