கயத்தாறில் மகளிர் தின விழா கொண்டாட்டம்
கயத்தாறு பஞ்சாயத்து யூனியன் அலுவலகத்தில் உலக மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது
கயத்தாறு:
கயத்தாறு பஞ்சாயத்து யூனியன் அலுவலகத்தில் உலக மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு வட்டார வளர்ச்சி அலுவலர் அரவிந்தன் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி (கிராம ஊராட்சி) அலுவலர் பானுமதி முன்னிலை வகித்து கேக் வெட்டினார். விழாவில் 50-க்கும் மேற்பட்ட அலுவலக பெண்கள் ஒரே நிறத்தில் சேலை அணிந்து வந்தனர். தொடர்ந்து கயத்தாறு வட்டார ஊரக வளர்ச்சித்துறை வளசேவை மையம் சார்பில் ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் சங்கரபாண்டியன் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ரேவதி ஆகியோர் தலைமையில் மகளிர் தினவிழா நடைபெற்றது. விழாவில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டனர். பேச்சு போட்டி, கட்டுரை போட்டி, தண்ணீர் நிரப்புதல், ஊசியில் நூல் கோர்த்தல், ஓட்டப்பந்தயம் உள்பட பல்வேறு போட்டிகள் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவில் யூனியன் மேலாளர் சுப்பையா, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பாலசுப்பிரமணியன் மற்றும் பொறியாளர்கள் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story