கூடலூர் :
தேனி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள கீழக்கூடலூர் 3-வது வார்டு கம்போஸ்ட் தெருவை சேர்ந்தவர் ராஜா (வயது 60). இவர் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. இதனால் மனமுடைந்த அவர் நேற்று வீட்டில் யாரும் இல்லாதபோது அரளி விதையை(விஷம்) அரைத்து குடித்தார். இதில் உயிருக்கு போராடி கொண்டிருந்த அவரை, அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கம்பம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கூடலூர் வடக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.