மும்பையில் மெட்ரோ ரெயில் சேவை நேரம் நீட்டிப்பு
மும்பையில் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால் மெட்ரோ ரெயில் சேவை நேரம் நீட்டிக்கப்பட்டு உள்ளது.
மும்பை,
மும்பையில் கடந்த ஜனவரியில் கொரோனா பாதிப்பு அதிகமானதை அடுத்து இரவுநேர ஊரடங்கு அமலில் இருந்தது. தற்போது பாதிப்பு சரிந்து உள்ளதால் கட்டுபாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. எனவே மும்பை இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. இந்தநிலையில் இரவு நேர கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதை அடுத்து மெட்ரோ ரெயில் சேவையும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மும்பை மெட்ரோ ஒன் நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலில், "முதல் மெட்ரோ ரெயில் காலை 6.30 மணிக்கு வெர்சோவா, காட்கோபரில் இருந்து புறப்படும். கடைசி ரெயில் இரவு 10.30 மணிக்கு வெர்சோவாவில் இருந்தும், காட்கோபரில் இருந்து 10.55-க்கும் புறப்படும். இதில் கூட்டநெரிசல் அதிகமான (திங்கள் முதல் வெள்ளி) நேரங்களில் 4½ நிமிடத்திற்கு ஒரு ரெயிலும், மற்ற நேரங்களில், விடுமுறை நாட்களில் 8 முதல் 11 நிமிடங்களுக்கு ஒரு ரெயில் இயக்கப்படும்" என கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story