மாமல்லபுரம் புராதன சின்னங்களை இன்று இலவசமாக கண்டுகளிக்கலாம்: தொல்லியல் துறை
மாமல்லபுரம் புராதன சின்னங்களை இன்று இலவசமாக கண்டுகளிக்கலாம் என்று தொல்லியல் துறை தெரிவித்துள்ளது.
மகளிர் தினத்தையொட்டி மாமல்லபுரத்தில் உள்ள வெண்ணெய் உருண்டைக்கல், அர்ச்சுனன் தபசு, ஐந்து ரதம், கடற்கரை கோவில் உள்ளிட்ட புராதன சின்னங்களை இன்று (செவ்வாய்க்கிழமை) ஒரு நாள் மட்டும் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை நுழைவுக்கட்டணம் இன்றி சுற்றுலா பயணிகள் இலவசமாக கண்டு ரசிக்கலாம் என்று மாமல்லபுரம் தொல்லியல் துறை தெரிவித்துள்ளது.
மாமல்லபுரம் புராதன சின்னங்களை கண்டு ரசிக்க உள்நாட்டு பயணிகளுக்கு ஒரு நபருக்கு ரூ.40-ம், வெளிநாட்டு பயணிகளுக்கு ரூ.600-ம் கட்டணமாக வசூலிக்கப்படுவது குறி்ப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story