தொடக்க கூட்டுறவு கடன் சங்கங்களில் மூலதன கடன்களுக்கான வட்டி ஊக்கத்தொகை திட்டம்


தொடக்க கூட்டுறவு கடன் சங்கங்களில்  மூலதன கடன்களுக்கான வட்டி ஊக்கத்தொகை திட்டம்
x
தினத்தந்தி 8 March 2022 7:06 PM IST (Updated: 8 March 2022 7:06 PM IST)
t-max-icont-min-icon

கால்நடை பராமரிப்பு, வளர்ப்புக்கு தொடக்க கூட்டுறவு கடன் சங்கங்களில் நடைமுறை மூலதன கடன்களுக்கான வட்டி ஊக்கத்தொகை திட்டம் செயல்படுத்தப்படுவதாக, மத்திய கூட்டுறவு வங்கி நிர்வாக இயக்குனர் சிவகாமி தெரிவித்துள்ளார்

தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் கால்நடை பராமரிப்பு, வளர்ப்பு மற்றும் இதர பணிகளுக்கு வழங்கப்படும் நடைமுறை மூலதன கடன்களுக்கான வட்டி ஊக்கத்தொகை திட்டம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் செயல்படுத்தப்படுகிறது.
இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி நிர்வாக இயக்குனர் சிவகாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
மூலதன கடன்
2021-22-ம் ஆண்டுக்கான கூட்டுறவு துறை மானிய கோரிக்கையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் கால்நடை பராமரிப்பு, வளர்ப்பு மற்றும் இதர பணிகளுக்கு விவசாய கடன் அட்டை திட்டத்தின் கீழ் கடன்கள் வழங்கப்படும் என்று அறிவித்து உள்ளார். 
இதனை செயல்படுத்தும் வகையில் தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் கால்நடை பராமரிப்பு வளர்ப்பு மற்றும் இதர பணிகளுக்கு விவசாக கடன் அட்டை திட்டத்தின் கீழ் நடைமுறை மூலதன கடன் வழங்கப்படுகிறது.
ஊக்கத்தொகை
இந்த வேளாண் கடன் அட்டை திட்டத்தின் கீழ் வழங்கப்படும் பயிர்க்கடன் மற்றும் கால்நடை பராமரிப்பு, வளர்ப்பு மூலதன கடன் இரண்டும் சேர்த்து ரூ.3 லட்சத்துக்கு மிகாமல் வழங்கப்படும். பயிர்க்கடன் ஏதும் பெறாமல் கால்நடை பராமரிப்பு, வளர்ப்பு நடைமுறை மூலதன கடன மட்டும் எனில் ரூ.2 லட்சத்துக்கு மிகாமல் வழங்கப்படும். 
நடைமுறை மூலதன கடன் தேவைகளை பூர்த்தி செய்ய மட்டுமே இந்த கடன் வழங்கப்படும். இந்த கடனின் தவணை காலம் 12 மாதங்கள் ஆகும். 
தவணை காலத்துக்குள் நடைமுறை மூலதன கடனை திருப்பி செலுத்தினால் 7 சதவீதம் வட்டி ஊக்கத்தொகை தமிழக அரசால் வழங்கப்படும். விவசாயிகள் தங்களது அடையாள ஆவணங்கள் மற்றும் நடைமுறை மூலதன கடன் தேவைக்கான சான்று சம்பந்தப்பட்ட கால்நடை மருத்துவமனை டாக்டரிடம் பெற்று சமர்ப்பிக்க வேண்டும். 
மேலும் சங்கம் கோரும் இதர ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.
எனவே தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் அருகில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களை அணுகி இந்த வாய்ப்பை பயன்படுத்தி பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Next Story