பழவேற்காடு கடலில் குளித்தபோது அலையில் சிக்கிய வாலிபர் மாயம்


பழவேற்காடு கடலில் குளித்தபோது அலையில் சிக்கிய வாலிபர் மாயம்
x
தினத்தந்தி 8 March 2022 8:23 PM IST (Updated: 8 March 2022 8:23 PM IST)
t-max-icont-min-icon

பழவேற்காடு கடலில் குளித்த வாலிபர் அலையில் அடித்து செல்லப்பட்டு மாயமானார்.

கடலில் குளித்தார்

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே உள்ள திருப்பாலைவனம் கிராமத்தில் வசித்து வருபவர் சிவகுமார் (வயது 45). இவரது மனைவி கஸ்தூரி (42). இவர்களது மகன் பாலாஜி என்ற ஹரிஹரன் (19).

இவர் சென்னையில் உள்ள அரசு தொழிற்கல்வி மையத்தில் படித்து வந்தார். இவர் விடுமுறை நாளான நேற்று முன்தினம் தனது நண்பர்களான தீபன், மனோஜ், ஆகாஷ் ஆகியோருடன் இணைந்து பழவேற்காடு சென்றுள்ளார். அங்கு லைட்ஹவுஸ் பகுதியில் உள்ள கடலில் நண்பர்களுடன் ஹரிஹரன் குளித்து கொண்டிருந்தார்.

மாயம்

உடன் சென்ற நண்பர்கள் நீண்ட நேரம் தேடியும் அவரை மீட்க முடியவில்லை. இது குறித்து ஹரிஹரனின் தந்தை சிவகுமார் திருப்பாலைவனம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து கடல் அலையில் அடித்து செல்லப்பட்டு மாயமான ஹரிஹரனை, உள்ளூர் மீனவர்கள் உதவியுடன் தேடி வருகின்றனர்.


Next Story