நத்தம் விஜயாசன பெருமாள் கோவிலில் புஷ்பாஞ்சலி
நத்தம் விஜயாசன பெருமாள் கோவிலில் பிரமோற்சவ விழாவை முன்னிட்டு புஷ்பாஞ்சலி நடந்தது
ஸ்ரீவைகுண்டம்:
நவதிருப்பதி கோவில்களில் 2-வது தலமான நத்தம் விஜயாசன பெருமாள் கோவிலில் மாசி பிரமோற்சவ திருவிழா கடந்த 24-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவில் தினமும் இரவு 7 மணிக்கு பெருமாள் சிம்ம வாகனம், அனுமார் வாகனம், சேஷ வாகனம், கருட வாகனம், யானை வாகனம், குதிரை வாகனங்களில் வீதி உலா நடைபெற்று வருகிறது. 11-ம் திருநாளான நேற்று காலை 7 மணிக்கு விஸ்வரூபம், 8 மணிக்கு திருமஞ்சனம் நடைபெற்றது. 10மணிக்கு சுவாமி எம் இடர்கடிவான் தாயார்களுடன் சயன மண்டபத்திற்கு எழுந்தருளினார். 11 மணிக்கு தாமரை, மல்லி, ரோஜா, துளசி, பச்சை, பொன்ற மலர்களால் புஷ்பாஞ்சலி நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஸ்தலத்தார்கள் ராஜப்பா வெங்கடாச்சாரி, ஸ்ரீனிவாசன் மற்றும் பக்தர்கள் திரளாக பங்கேற்றனர். ஏற்பாடுகளை நிர்வாக அதிகாரி கோகுல மணிகன்டன், தக்கார் அஜீத், ஆய்வாளர் நம்பி மற்றும் விஜயாசன பெருமாள் கைங்கர்ய சபாவினர் செய்து இருந்தனர்.
Related Tags :
Next Story