குந்தா தூனேரியில் மாரியம்மன் கோவில் திருவிழா


குந்தா தூனேரியில் மாரியம்மன் கோவில் திருவிழா
x
தினத்தந்தி 8 March 2022 8:53 PM IST (Updated: 8 March 2022 8:53 PM IST)
t-max-icont-min-icon

குந்தா தூனேரியில் மாரியம்மன் கோவில் திருவிழா நடந்தது.

ஊட்டி

நீலகிரி மாவட்டத்தில் அட்டி என்று அழைக்கப்படும் கிராமங்களில் படுகர் இன மக்கள் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் ஆண்டுதோறும் ஹெத்தையம்மன் பண்டிகையை பாரம்பரியம் மாறாமல் கொண்டாடி வருகின்றனர். 

அதேபோல் மார்ச் மாதம் முதல் மே மாதம் வரை கிராமங்களில் மாரியம்மன் கோவில் திருவிழா வெகு விமர்சையாக நடத்தப்படுவது வழக்கம். மஞ்சூர் அருகே குந்தா தூனேரி கிராமத்தில் மாரியம்மன் கோவில் திருவிழா  சிறப்பு பூஜையுடன் தொடங்கியது. 

தொடர்ந்து 11 மணியளவில் நாராயணமூர்த்தி கோவிலில் இருந்து அம்மனை அழைத்து வரும் நிகழ்ச்சி நடந்தது. இதில் மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 

முக்கிய வீதிகளில் சுவாமி உலா வந்தார். பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து படுகர் இன மக்கள் தங்களது பாரம்பரிய நடனம் ஆடினர். அதேபோல் தொடர்ந்து கிராமங்களில் திருவிழா நடைபெற உள்ளது.


Next Story