தினத்தந்தி புகார் பெட்டி
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகளை பார்க்கலாம்.
திண்டுக்கல்:
அரசு மருத்துவமனையாக மாறுமா?
பழனியை அடுத்த கீரனூரில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இங்கு சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த மக்கள் சிகிச்சைக்காக வருகின்றனர். இதனால் கூடுதல் மருத்துவ வசதி தேவைப்படுகிறது. எனவே சுகாதார நிலையத்தை அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்தினால் மக்களுக்கு நல்ல மருத்துவ வசதி கிடைக்கும். இதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -கவுதம் முருகேசன், கீரனூர்.
சாக்கடை கால்வாய் வசதி
திண்டுக்கல் அருகே உள்ள பெரியக்கோட்டை ஊராட்சி கஸ்தூரிநாயக்கன்பட்டியில் முனியாண்டி கோவில் அருகே உள்ள ஒரு தெருவில் சாக்கடை கால்வாய் வசதி இல்லை. இதனால் கழிவுநீர் செல்வதற்கு சிரமமாக உள்ளது. எனவே சாக்கடை கால்வாய் கட்டித்தர வேண்டும்.
-லிங்கம், கஸ்தூரிநாயக்கன்பட்டி.
சேதம் அடைந்த சாலை
தேனி என்.ஆர்.டி.நகரில் பிரதான சாலை சேதம் அடைந்து குண்டும், குழியுமாக மாறிவிட்டது. அந்த வழியாக சைக்கிளில் கூட செல்ல முடியவில்லை. இதனால் பள்ளி மாணவர்கள் உள்பட அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். எனவே சாலையை சீரமைக்க வேண்டும்.
-கதிர், தேனி.
அடிப்படை வசதிகள் தேவை
பழனியை அடுத்த மானூரில் சக்திவிநாயகர்கோவில் பின்பு அமைந்துள்ள பகுதியில் சாலை, சாக்கடை கால்வாய் ஆகிய அடிப்படை வசதிகள் முறையாக இல்லை. மேலும் குடிநீரும் தரமாக இல்லை. எனவே அடிப்படை வசதிகள் செய்து தருவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -பவித்ரா, மானூர்.
சாக்கடை கால்வாயில் அடைப்பு
திண்டுக்கல் பஸ்நிலையம் அருகே உள்ள ஸ்கீம் சாலையின் ஓரத்தில் அமைந்து இருக்கும் சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுவிட்டது. இதனால் கழிவுநீர் செல்லாமல் தேங்கி நின்று துர்நாற்றம் வீசுகிறது. மேலும் கொசுத்தொல்லையும் அதிகரித்து விட்டது. எனவே சாக்கடை கால்வாயை தூர்வாரி சரிசெய்ய வேண்டும்.
-மாரி, திண்டுக்கல்.
Related Tags :
Next Story