விழுப்புரம் மாவட்டத்தில் மகளிர் தின விழா கொண்டாட்டம்
விழுப்புரம் மாவட்டத்தில் மகளிர் தின விழா கொண்டாட்டம்
விழுப்புரம்
அரசு இசைப்பள்ளி
விழுப்புரத்தில் உள்ள மாவட்ட அரசு இசைப்பள்ளியில் மகளிர் தின விழா நேற்று நடைபெற்றது. விழாவிற்கு இசைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஈஸ்வரன் தலைமை தாங்கினார். விழுப்புரம் நகரமன்ற 16-வது வார்டு கவுன்சிலர் மெரீனா சரவணன், வட்டார மருத்துவ அலுவலர் பிரியாபத்மாசினி ஆகியோர் கலந்துகொண்டு மகளிர் தினத்தின் முக்கியத்துவம் குறித்து சிறப்புரையாற்றினர். விழாவையொட்டி இசைப்பள்ளி மாணவிகளுக்கு மங்கள இசை, பாட்டு, நடனம், பரதநாட்டியம், நாதஸ்வரம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு பரிசு வழங்கி பாராட்டப்பட்டனர். விழாவில் இசைப்பள்ளி ஆசிரியர்கள் முருகையன், கோதண்டராமன், தமிழ்செல்வன், ராஜன், பிரகாசம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
ஸ்ரீரங்கபூபதி கல்வி நிறுவனம்
செஞ்சியை அடுத்த ஆலம்பூண்டியில் உள்ள ஸ்ரீரங்கபூபதி கல்வி நிறுவனத்தில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு கல்லூரி தாளாளர் வக்கீல் ரங்கபூபதி தலைமை தாங்கினார். செயலாளர் ஸ்ரீபதி, இயக்குனர் சாந்தி பூபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முதல்வர் செந்தில்குமார் வரவேற்றார். நிகழ்ச்சியில் பேச்சாளர் சுமதிஸ்ரீ சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பெண்களின் பெருமைகள் குறித்து பேசினார். விழாவில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டு மாணவ-மாணவிகளுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இதில் கல்லூரி முதல்வர்கள் கோவிந்தராஜ், சசிகுமார், ராஜேஷ், மேனகா காந்தி, பேராசிரியர்கள் நந்தாபாய், சர்தாஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
போலீஸ் நிலையங்கள்
வளவனூர் போலீஸ் நிலையத்தில் மகளிர் தின விழா கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. இதற்கு இன்ஸ்பெக்டர் தீபா தலைமை தாங்கினார். வளவனூர் முதன்மை மருத்துவ அலுவலர் டாக்டர் கோதை ராஜேஸ்வரி முன்னிலை வகித்தார். விழாவில் கண்டமங்கலம் ஒன்றியக்குழு தலைவர் வாசன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு இன்ஸ்பெக்டர் தீபாவுக்கு மலர் கொத்து கொடுத்து வாழ்த்துக்களை தெரிவித்தார். விழாவில் பெண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் இளமதி, சித்த மருத்துவர் சித்ரா, கிராம நிர்வாக அலுவலர் மாலதி, வளவனூர் பேரூராட்சி 2-வது வார்டு கவுன்சிலர் மகாலட்சுமி, நரிக்குறவர் சாவித்திரி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதேபோல் விக்கிரவாண்டி தாலுகா கஞ்சனூர் போலீஸ் நிலையத்தில் நடைபெற்ற உலக மகளிர் தின விழாவுக்கு செஞ்சி துணை போலீஸ் சூப்பிரண்டு பிரியதர்ஷினி தலைமை தாங்கி கேக் வெட்டி, போலீசாருக்கு இனிப்பு வழங்கி வாழ்த்தி பேசினார். சப்-இன்ஸ்பெக்டர் ஜெயபால் அனைவரையும் வரவேற்றார். விழாவில் இன்ஸ்பெக்டர்கள் சுபா, எழிலரசி, போலீஸ்காரர்கள் உலகேஸ்வரி, அம்சவள்ளி, ஜீவா, பரிமளா, ஜோதி, அருணா, தனம்.வடிக்கரசி உட்பட பலர் பங்கேற்றனர்.
ஊராட்சி ஒன்றிய அலுவலகம்
விக்கிரவாண்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற மகளிர் தின விழாவில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நாராயணன், குலோத்துங்கன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் குணமணி கேக் வெட்டினார். பின்னர் அனைவருக்கும் வாழ்த்துக்கள் தெரிவித்து இனிப்பு வழங்கப்பட்டது. விழாவில் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ரமா, பிரபா, சுமதி, கலைவாணி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாலசுப்பிரமணியன், சாகிதா பானு மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story