கிணற்றில் தவறி விழுந்து கடமான் பலி
கடமலைக்குண்டு அருகே கிணற்றில் தவறி விழுந்து கடமான் இறந்தது
கடமலைக்குண்டு:
கடமலைக்குண்டு அருகே கண்டமனூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட அய்யனார்கோவில் மலைப்பகுதியில் கடமான், செந்நாய், கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் அதிக அளவில் உள்ளன.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அய்யனார்புரம் அருகே உள்ள தனியார் தோட்ட கிணற்றில் கடமான் ஒன்று இறந்து கிடந்தது. இதுகுறித்து தகவலறிந்த கண்டமனூர் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கடமான் உடலை கைப்பற்றினர். அது சுமார் 2 வயது உடைய ஆண் கடமான் என்றும், தண்ணீர் தேடி வனப்பகுதியில் வந்தபோது தவறி கிணற்றில் விழுந்து பலியானதும் தெரியவந்தது. பின்னர் கால்நடை டாக்டர் வரவழைக்கப்பட்டு கடமான் உடலை பரிசோதனை செய்து அருகே உள்ள மலைப்பகுதியில் புதைத்தனர்.
மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதனால் மலைப்பகுதியில் உள்ள வனவிலங்குகள் தண்ணீர் தேடி தனியார் தோட்டங்களுக்கு வர தொடங்கியுள்ளது.
அவ்வாறு வரும் வனவிலங்குகள் சாலையை கடக்கும் போது வாகனங்களில் அடிபட்டோ அல்லது கிணற்றில் விழுந்தோ பலியாகி வருகிறது. எனவே அய்யனார்கோவில் மலைப்பகுதியில் குடிநீர் தொட்டிகளில் வனவிலங்குகளின் தேவைக்காக வனத்துறையினர் தண்ணீர் நிரப்பி வைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர
Related Tags :
Next Story