தியாகதுருகம் அருகே அரசு பள்ளியில் அறிவியல் கண்காட்சி
தியாகதுருகம் அருகே அரசு பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடை பெற்றது.
கண்டாச்சிமங்கலம்,
தியாகதுருகம் அருகே விருகாவூர் அரசு தொடக்கப்பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. இதன் தொடக்க நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியை பாரதி தலைமை தாங்கினார்.
ஊராட்சி மன்ற தலைவர் சந்திரலேகா அருள் முன்னிலை வகித்தார். இதில் பசுமை வீடுகள், பிளாஸ்டிக் ஒழிப்பு, சூரிய மின் சக்தி பயன்பாடு, இதயம் செயல்படும் விதம், வாகன மாதிரிகள் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட படைப்புகளை மாணவ, மாணவிகள் கண்காட்சிக்காக வைத்திருந்தனர்.
கண்காட்சியை பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்களும் பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. தொடர்ந்து சிறந்த படைப்புகளை தேர்வு செய்து மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
அப்போது ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் சுந்தரம், ஓய்வு பெற்ற மின் பொறியாளர் ராமச்சந்திரன், ஊராட்சி மன்ற துணை தலைவர் அலமேலு பன்னீர்செல்வம், பள்ளி மேலாண்மை குழு தலைவி ஜனனி மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story