பெண்கள் அனைவரும் சிறந்த கல்வி கற்று உயர்ந்த நிலை அடைய உறுதியேற்க வேண்டும் தர்மபுரியில் நடந்த விழாவில் கலெக்டர் பேச்சு


பெண்கள் அனைவரும் சிறந்த கல்வி கற்று உயர்ந்த நிலை அடைய உறுதியேற்க வேண்டும் தர்மபுரியில் நடந்த விழாவில் கலெக்டர் பேச்சு
x
தினத்தந்தி 8 March 2022 10:58 PM IST (Updated: 8 March 2022 10:58 PM IST)
t-max-icont-min-icon

தர்மபுரி மாவட்டத்தில் பெண்கள் அனைவரும் சிறந்த கல்வியை கற்று உயர்ந்த நிலையை அடைய உறுதியேற்க வேண்டும் என்று தர்மபுரியில் நடந்த உலக மகளிர் தின விழாவில் கலெக்டர் திவ்யதர்சினி கூறினார்.

தர்மபுரி:
தர்மபுரி மாவட்டத்தில் பெண்கள் அனைவரும் சிறந்த கல்வியை கற்று உயர்ந்த நிலையை அடைய உறுதியேற்க வேண்டும் என்று தர்மபுரியில் நடந்த உலக மகளிர் தின விழாவில் கலெக்டர் திவ்யதர்சினி கூறினார்.
உலக மகளிர் தின விழா
தர்மபுரி மாவட்ட சமூக நலத்துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்துறை, மகளிர் திட்டம் ஆகியவற்றின் சார்பில் உலக மகளிர் தின விழா தர்மபுரி அரசு கலைக்கல்லூரி கலை அரங்கில் நடைபெற்றது. விழாவுக்கு கலெக்டர் திவ்யதர்சினி தலைமை தாங்கி குழந்தை திருமண தடுப்பு குறித்த விழிப்புணர்வு குறுந்தகட்டை வெளியிட்டு பேசினார்.
அப்போது அவர் பேசுகையில், தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பெண்கள் பல்வேறு சாதனைகளை படைக்க வேண்டும். கல்வி, பொருளாதாரம் பெண்களின் வளர்ச்சி, பெண்களின் முன்னேற்றம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் வளர்ச்சி அடைய வேண்டும். பெண்கள் அனைவரும் சிறந்த கல்வியை கற்று உயர்ந்த நிலையை அடைய உறுதியேற்க வேண்டும். குழந்தை திருமணமே இல்லாத மாவட்டமாக தர்மபுரி மாவட்டத்தை உருவாக்க வேண்டும் என்று பேசினார்.
கடன் உதவி
இதனை தொடர்ந்து விளையாட்டு துறையில் தேசிய அளவில், மாநில அளவில் பங்கேற்று சிறப்பு பெற்ற மாணவிகள், மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கலெக்டர் சான்றிதழ்கள் மற்றும் பரிசுகளையும் வழங்கினார். மேலும் சுயதொழில் தொடங்குவதற்கு பாலக்கோடு புதூர் மாரியம்மன் திருநங்கைகள் சிறப்பு குழுவிற்கு ரூ.5 லட்சம் கடனுதவி, ஊட்டச்சத்து போட்டியில் மாவட்ட அளவில் வெற்றி பெற்ற 5 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.7,000 பரிசை அவர் வழங்கினார்.
உலக மகளிர் தின விழாவையொட்டி மகளிர் தின விழா 2022 என்று வடிவமைத்து நின்ற மாணவிகளை கலெக்டர் பார்வையிட்டு பாராட்டினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் அனிதா, உதவி கலெக்டர் சித்ரா விஜயன், சமூக பாதுகாப்பு திட்ட தனி துணை கலெக்டர் சாந்தி, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டப்பணிகள் மாவட்ட திட்ட அலுவலர் ஜான்சிராணி, மாவட்ட சமூக நல அலுவலர் பவித்ரா, சிறப்பு விருந்தினர் அரங்கநாயகி கண்ணன் மற்றும் அரசு அலுவலர்கள், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள், கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டனர்.

Next Story