விதிகளை மீறி கடைகளில் வைத்திருந்த 571 கிலோ விதைகளை விற்பனை செய்ய தடை அதிகாரிகள் நடவடிக்கை


விதிகளை மீறி கடைகளில் வைத்திருந்த  571 கிலோ விதைகளை விற்பனை செய்ய தடை அதிகாரிகள் நடவடிக்கை
x
தினத்தந்தி 8 March 2022 10:59 PM IST (Updated: 8 March 2022 10:59 PM IST)
t-max-icont-min-icon

தர்மபுரி மாவட்டத்தில் விதிகளை மீறி வைத்திருந்த 571 விதைகளை விற்பனை செய்ய அதிகாரிகள் தடை விதித்தனர்.

தர்மபுரி:
தர்மபுரி மாவட்டத்தில் விதிகளை மீறி வைத்திருந்த 571 விதைகளை விற்பனை செய்ய அதிகாரிகள் தடை விதித்தனர்.
விற்பனைக்கு தடை
தர்மபுரி மாவட்டத்தில் தற்போது பருத்தி சாகுபடி செய்ய விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். தர்மபுரி விதை ஆய்வு துணை இயக்குனர் சங்கர் தலைமையில் விதை ஆய்வாளர்கள் சரவணன், கண்ணன், கார்த்திக், சிங்காரவேலன் உள்ளிட்ட அதிகாரிகள் அடங்கிய குழுவினர் மாவட்டத்தில் உள்ள விதை விற்பனை நிலையங்களில் திடீர் ஆய்வு செய்தனர்.
அப்போது பல்வேறு விதை விற்பனை நிலையங்களில் விதை சட்ட விதிகளை மீறி விற்பனைக்கு வைத்திருந்த ரூ.7 லட்சத்து 19 ஆயிரத்து 231 மதிப்புள்ள 571 கிலோ விதைகள் கண்டறியப்பட்டன. இவற்றை விற்பனை செய்ய அதிகாரிகள் தடை விதித்தனர். 
இதுகுறித்து விதை ஆய்வு துணை இயக்குனர் சங்கர் கூறியதாவது:-
கடும் நடவடிக்கை
தர்மபுரி மாவட்டத்தில் 323 விதை விற்பனை கடைகளில் உரிமம் பெற்று விதை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் 10 ஆயிரம் ஏக்கர் பரப்பில் கோடை பருவத்தில் பருத்தி சாகுபடி செய்யப்படுகிறது. தற்போது காய் புழுக்கள் எதிர்ப்பு சக்தி உடைய பி.டி. ரக பருத்தி விதைகளை மட்டும் விற்பனை செய்ய வேண்டும். களைக்கொல்லி எதிர்ப்பு சக்தி உடைய மரபணு மாற்றம் செய்த பருத்தி விதைகளை விற்பனை செய்யக்கூடாது என்று அரசு தெரிவித்துள்ளது.
அனைத்து விதை ரகங்களுக்கும் விதை சான்றளிப்பு துறையால் வழங்கப்பட்ட பதிவு சான்று, கொள்முதல் பட்டியல் மற்றும் அனைத்து குவியல்களுக்கும் தமிழ்நாடு அரசு விதை பரிசோதனை நிலையத்தில் விதை பரிசோதனை செய்த முளைப்புத்திறன் அறிக்கை ஆகியவை கட்டாயம் இருக்க வேண்டும். மத்திய, மாநில அரசுகளால் அனுமதிக்கப்படாத விதைகளை விற்பனை செய்தாலோ அல்லது இருப்பு வைத்திருந்தாலோ சம்பந்தப்பட்ட விற்பனையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story