தர்மபுரியில் காவல் துறை சார்பில் மகளிர் தின விழா கொண்டாட்டம்
தர்மபுரியில் காவல் துறை சார்பில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.
தர்மபுரி:
தர்மபுரி மாவட்ட காவல் துறை சார்பில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. தர்மபுரி ஆயுதப்படை திருமண மண்டபத்தில் நடைபெற்ற விழாவுக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன் தலைமை தாங்கினார். கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் அண்ணாமலை, புஷ்பராஜ், குணசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அரூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பெனாசிர் பாத்திமா வரவேற்றார். விழாவையொட்டி பெண் போலீசார் கேக் வெட்டி அனைவருக்கும் வழங்கினர்.
இதைத்தொடர்ந்து போலீஸ் சூப்பிரண்டு, பெண் போலீசாருக்கு மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்தார். விழாவையொட்டி பெண் போலீசார் பங்கேற்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாவட்டம் முழுவதும் பணியாற்றும் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட 250 பெண் போலீசார் கலந்து கொண்டனர்.
இதே போன்று தர்மபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் அலுவலகத்தில் பணியாற்றும் அனைத்து அமைச்சு பெண் பணியாளர்கள் கலந்து கொண்டு கேக் வெட்டி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
Related Tags :
Next Story