தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டி
சாலை ஆக்கிரமிப்பு
திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் தாலுகா ஆதமங்கலம் புதூர், கெங்கவரம் செல்லும் சாலையின் இரு புறமும் பலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. அய்யப்பன்நகர், நவாப்பாளையம், கெங்கவரம், பெருமாபாளையம், தாதப்பாளையம் ஆகிய கிராமங்களில் உள்ள பொதுமக்கள், பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ-மாணவிகள், வேளாண் பொருட்களை ஏற்றி செல்லும் விவசாயிகள் இந்த வழியாகத்தான் செல்ல வேண்டும். எனவே சாலை ஆக்கிரமிப்பை அதிகாரிகள் அகற்ற வேண்டும்.
-நவாப் ஆர்.முருகன்.
குப்பைகள் அகற்றப்படுமா?
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா நகராட்சி 16-வது வார்டில் உள்ள அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் பின்புறம் குப்பைகள் கொட்டப்பட்டு கிடக்கிறது. மாட்டு சாணமும் கிடப்பதால் துர்நாற்றம் வீசுகிறது. பள்ளியின் ஜன்னல் பகுதியில் குப்பைகள் கிடப்பதால் மாணவிகளின் சுகாதாரம் கேள்விக்குறியாகி வருகிறது. எனவே பள்ளிப்பகுதியில் உள்ள குப்பைகளை அகற்ற நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-எஸ்.கவிதா, வாலாஜாபேட்டை.
(படம்)
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பெருமாள்பேட்டை பகுதியில் உள்ள பைபாஸ் சர்வீஸ் சாலையில் குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. இந்த குப்பைகளைலா சுகாதார சீர்கேடு ஏற்பட்டு அந்த வழியாக பொதுமக்கள் செல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் நலன்கருதி ஏற்கனவே கொட்டப்பட்டுள்ள குப்பைகளை அகற்றி, மேலும் குப்பைகள் கட்டப்பாமட்ல தடுக்க நகராட்சி நிர்வாகம் முன்வர வேண்டும்.
-அருண்குமார், வாணியம்பாடி.
வீணாகும் குடிநீர்
காட்பாடி கழிஞ்சூரில், திருமணி செல்லும் சாலையில் காவிரி கூட்டுக்குடிநீர் குழாய்க்கான வால்வு உள்ளது. இந்த வால்வில் தண்ணீர் அதிக அளவில் கசிந்து தொட்டிநிரம்பி குடிநீர் வீணாகி வருகிறது. இதுகுறித்து மாநகராட்சி அலுவலகத்தில் புகார் தெரிவித்தும் 5 மாதங்களுக்கு மேலாகியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. கோடைகாலம் தொடங்கிவிட்டதால் குடிநீர் வீணாவதை தடுக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-சதீஷ்குமார், கழிஞ்சூர்.
பழுதான சாலை
திருவண்ணாமலை மாவட்டம் போளூரை அடுத்த பொத்தரை ஊராட்சியில் உள்ள பிரதான சாலையாகும். இந்தச் சாலை புதுப்பித்து 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இந்தச் சாலை மிகவும் மோசமாக நிலையில் பழுதடைந்துள்ளது. சாலையை சீரமைக்கக்கோரி அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?
-சரண்குமார், பொத்தரை.
ரோட்டில் கொட்டப்படும் குப்பைகள்
வேலூர் சத்துவாச்சாரி ஆர்.டி.ஓ. அலுவலக சாலையின் கடைசி பகுதியில் நேருநகரில் உள்ள தெருவில் பொதுமக்கள் குப்பைகளை கொட்டி வருகின்றனர். இந்த குப்பைகளை பன்றி, நாய் போன்றவை கிளறி விடுவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. ரோட்டில் குப்பைகள் கொட்டப்படுவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-வினோத்குமார், சத்துவாச்சாரி.
கழிவுநீரை அகற்ற வேண்டும்
திருவண்ணாமலை ஒன்றியத்திற்கு உட்பட்ட பாவுப்பட்டு கிராமத்தில் பொதுமக்கள் குடிநீர் தேவைக்காக கோவில் அருகே குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டு அதன் மூலம் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. குடிநீர் தொட்டியை சுற்றி அதிக அளவில் கழிவுநீர் தேங்கி நிற்பதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தோற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்றி தூய்மைப்படுத்த வேண்டும்.
-நாதன், பாவுப்பட்டு.
Related Tags :
Next Story