விழுப்புரம் சேமிப்பு கிடங்கு முன்பு சுமைப்பணி தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
விழுப்புரம் சேமிப்பு கிடங்கு முன்பு சுமைப்பணி தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
விழுப்புரம்
விழுப்புரத்தில் உள்ள தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு முன்பு நேற்று காலை சுமைப்பணி தொழிலாளர் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு சுமைப்பணி சங்க தலைவர் சுரேஷ் தலைமை தாங்கினார். துணைத்தலைவர்கள் பாலு, ஓம்சக்தி, துணை செயலாளர்கள் வசிகமலை, வடிவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் முத்துக்குமரன், செயலாளர் மூர்த்தி, சுமைப்பணி சங்க பொதுச்செயலாளர் குமார் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
குடோன் காலியாக இருந்தும் உரம் உள்ளிட்ட சரக்குகளை உள்ளே கொண்டு வர பணம் கேட்கும் மேலாளரை கண்டித்தும், அரிசி மூட்டைகளை வெளியே கொண்டு செல்லாமல் குடோனில் இருப்பதால் பணி முடக்கம் ஏற்படுகிற சூழலில் உரிய தலையீடு செய்யாமல் இருப்பதை கண்டித்தும், சுமைப்பணி தொழிலாளர்களுக்கு ஓய்வறை, வாகன நிறுத்துமிடம் ஆகியவற்றை ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சி.ஐ.டி.யு. மாவட்ட பொருளாளர் பாலகிருஷ்ணன், சுமைப்பணி சங்க மாவட்ட தலைவர் பழனி, டாஸ்மாக் சுமைப்பணி சங்க தலைவர் மணிகண்டன், செயலாளர் இளவரசன், பொருளாளர் அய்யப்பன், சுமைப்பணி சங்க செயலாளர் பாரதிதாசன் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் பொருளாளர் புஷ்பராஜ் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story