வேளாண்மை அலுவலகம் முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்


வேளாண்மை அலுவலகம் முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 8 March 2022 11:00 PM IST (Updated: 8 March 2022 11:00 PM IST)
t-max-icont-min-icon

கலசபாக்கத்தில் வேளாண்மை அலுவலகம் முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கலசபாக்கம்

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் தென்பள்ளிப்பட்டு பகுதியில் உள்ள வேளாண்மை விரிவாக்க அலுவலகத்தில் நடந்த விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டத்துக்கு மாவட்ட ஊராட்சிகள் உதவி இயக்குநர் லட்சுமிநரசிம்மன் தலைமை தாங்கினார். 

விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டத்திற்கு வந்த விவசாயிகள் திடீரென வேளாண்மை விரிவாக்க அலுவலகம் முன்பு யூரியா அதிக விலைக்கு விற்பதையும், தட்டுப்பாட்டை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவேண்டியும், கலசபாக்கம் தாலுகாவில் நடைபெற்ற சிறப்பு பட்டா மாறுதல் முகாமில் பெறப்பட்ட மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

இதில், கதிரேசன், வெங்கடேசன், சிவலிங்கம், நடராஜன் மற்றும் விவசாயிகள் பலர் கலந்துகொண்டனர்.

Next Story