திருவண்ணாமலையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
திருவண்ணாமலையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை பெரியார் சிலை அருகில் தெற்கு மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி சார்பில் தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு 1,500 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
மாவட்ட அமைப்பாளர் சி.என்.அண்ணாதுரை எம்.பி. தலைமை தாங்கினார். மாவட்ட அவைத்தலைவர் த.வேணுகோபால், கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர் வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., வடக்கு மாவட்ட பொறுப்பாளர் எம்.எஸ்.தரணிவேந்தன், மருத்துவரணி துணைத்தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன், எம்.எல்.ஏ.க்கள் மு.பெ.கிரி, பெ.சு.தி.சரவணன், தலைமை செயற்குழு உறுப்பினர் இரா.ஸ்ரீதரன், நகரமன்ற தலைவர் நிர்மலாவேல்மாறன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளா் கார்த்திவேல்மாறன் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக பொதுப்பணித்துறை அமைச்சரும், மாவட்ட செயலாளருமான எ.வ.வேலு கலந்துகொண்டு 1,500 பயனாளிகளுக்கு தையல் எந்திரம், இஸ்திரி பெட்டி, இட்லி குண்டான், தேநீர் கேன் போன்றவற்றை நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
முன்னதாக அமைச்சர் எ.வ.வேலு பேசுகையில், ‘புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நகரமன்ற தலைவர் மற்றும் துணைத்தலைவருக்கு இளைஞர் அணி சார்பில் யானை பொம்மை பரிசளிக்கப்பட்டது. அது எனக்கு யானை படையை தான் நினைவுப்படுத்தியது. ஒரு படைக்கு யானை படை தான் முன்னிலை வகிக்கும். இந்த பரிசு திருவண்ணாமலை நகராட்சி யானை பலத்துடன் இருப்பதை உணர்த்துகின்றது.
கோவில் சொத்தை அபகரிக்க விடமாட்டோம். கோவில் சொத்தை மீட்டு கோவிலுக்கே ஒப்படைப்போம். சமூக நீதி, ஜனநாயகத்தை காப்பதே திராவிட மாடல் ஆட்சி. இந்த திராவிட மாடல் ஆட்சிக்கும், மு.க.ஸ்டாலின் சாதனைக்காகவும் தான் உள்ளாட்சி தேர்தல்களில் 100 சதவீத வெற்றியை தமிழ்நாட்டு மக்கள் தந்திருக்கிறார்கள்’ என்றார்.
விழாவில் மாவட்ட ஊராட்சி குழுத்தலைவர் பார்வதி சீனுவாசன், மாவட்ட பொருளாளர் எஸ்.பன்னீர்செல்வம், துணை செயலாளர்கள் சுந்தரபாண்டியன், பாரதிராமஜெயம், நகரமன்ற துணைத்தலைவர் ராஜாங்கம், மாவட்ட அமைப்பாளர்கள் டி.வி.எம்.நேரு, கே.வி.மனோகரன், ஏ.ஏ.ஆறுமுகம், பா.ஷெரீப், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் சு.விஜயராஜ், எம்.ஆர்.கலைமணி, ஒன்றிய செயலாளர்கள் பன்னீர்செல்வம், கோ.ரமேஷ், அருணை கன்ஸ்ட்ரக்சன் துரை.வெங்கட், வெற்றி டிஜிட்டல் வக்கீல் கார்த்திகேயன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story