விழுப்புரம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் போட்டி தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு


விழுப்புரம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் போட்டி தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு
x
தினத்தந்தி 8 March 2022 11:00 PM IST (Updated: 8 March 2022 11:00 PM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் போட்டி தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு



விழுப்புரம்

விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தில் பல்வேறு போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இப்போட்டி தேர்வில் கலந்துகொண்டு பல்வேறு மாணவர்கள் தேர்ச்சி பெற்று அரசு பணிகளில் சேர்ந்துள்ளனர்.
இந்நிலையில் பணியாளர் தேர்வு ஆணையம்(எஸ்.எஸ்.சி.- சி.எச்.எஸ்.எல்.) தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு இன்று (புதன்கிழமை) முதல் தொடங்கி ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வெள்ளி வரை மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெற உள்ளது. இப்பயிற்சி வகுப்புகளில் கலந்துகொண்டு பயனடைய விரும்புவோர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரில் அணுகி பதிவு செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. எனவே விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த தேர்வுக்கு விண்ணப்பித்த இளைஞர்கள், இப்பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு மாவட்ட கலெக்டர் மோகன் தெரிவித்துள்ளார்.

Next Story