செங்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை டெங்கு மஸ்தூர் பணியாளர்கள் முற்றுகை


செங்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை டெங்கு மஸ்தூர் பணியாளர்கள் முற்றுகை
x
தினத்தந்தி 8 March 2022 11:00 PM IST (Updated: 8 March 2022 11:00 PM IST)
t-max-icont-min-icon

செங்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை டெங்கு மஸ்தூர் பணியாளர்கள் முற்றுகையிட்டனர்.

செங்கம்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் சுகாதார துறையின் கீழ் பணிபுரியும் டெங்கு மஸ்தூர்களுக்கு கடந்த சில மாதங்களாக ஊதியம் வழங்கவில்லை என கூறப்படுகிறது. 

இதனை கண்டித்து நேற்று ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை டெங்கு மஸ்தூர் பணியாளர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

அப்போது அவர்கள் உடனடியாக ஊதியம் வழங்கக்கோரி கோஷமிட்டனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Next Story