கர்நாடகாவுக்கு லாரியில் கடத்த முயன்ற 10½ டன் ரேஷன் அரிசி பறிமுதல் 3 பேர் கைது
கர்நாடகாவுக்்கு லாரியில் கடத்த முயன்ற 10½ டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
கிருஷ்ணகிரி,:
கர்நாடகாவுக்கு லாரியில் கடத்த முயன்ற 10½ டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
வாகன தணிக்கை
கிருஷ்ணகிரி மாவட்ட உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் வளர்மதி தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் கோபிநாத் மற்றும் போலீசார் நேற்று காலை, கிருஷ்ணகிரி சுங்கச்சாவடி அருகில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், 210 மூட்டைகளில் 10 ஆயிரத்து 500 கிலோ ரேஷன் அரிசி இருந்தது தெரிந்தது. இதுதொடர்பாக போலீசார் லாரி டிரைவர் மற்றும் உடன் வந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது தர்மபுரி, பென்னாகரம் பகுதிகளில் ரேஷன் அரிசி வாங்கி, கர்நாடகாவுக்கு அதிக விலைக்கு விற்பதற்காக கடத்தி சென்றது தெரிந்தது.
3 பேர் கைது
இதையடுத்து லாரியில் இருந்த தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி பகுதியை சேர்ந்த சென்னசாமி (வயது 36), மாதேஷ் (35), பென்னாகரம் பகுதியை சேர்ந்த முத்து (22) ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் ரேஷன் அரிசி மூட்டைகளுடன் லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இந்த ரேஷன் அரிசியை நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் போலீசார் ஒப்படைத்தனர். இதுதொடர்பாக தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story