கெலமங்கலம் அருகே காதல் திருமணம் செய்த புதுப்பெண் தற்கொலை துணை போலீஸ் சூப்பிரண்டு விசாரணை
கெலமங்கலம் அருகே காதல் திருமணம் செய்த 5 மாதத்தில் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக துணை போலீஸ் சூப்பிரண்டு விசாரணை நடத்தி வருகிறார்.
ராயக்கோட்டை:
கெலமங்கலம் அருகே காதல் திருமணம் செய்த 5 மாதத்தில் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக துணை போலீஸ் சூப்பிரண்டு விசாரணை நடத்தி வருகிறார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
காதல் திருமணம்
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள இருதுகொட்டாய் பகுதியை சேர்ந்தவர் சத்யா (வயது 21). கெலமங்கலம் பகுதியை சேர்ந்தவர் நவீன்குமார். இவர்கள் 2 பேரும் கடந்த 5 மாதத்திற்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
இந்த நிலையில், கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. சம்பவத்தன்று இரவும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த சத்யா வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கெலமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
விசாரணை
அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று சத்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் காதல் திருமணம் செய்து 5 மாதங்களில் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக தேன்கனிக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு கிருத்திகா விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story