தேங்காய் ஏலம்


தேங்காய் ஏலம்
x
தினத்தந்தி 8 March 2022 11:02 PM IST (Updated: 8 March 2022 11:02 PM IST)
t-max-icont-min-icon

பரமத்திவேலூரில் தேங்காய் மறைமுக ஏலம் நடந்தது.

பரமத்திவேலூர்:
பரமத்திவேலூர் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை தேங்காய் மறைமுகமாக ஏலம் விடப்பட்டு வருகிறது. கடந்த வாரம் நடந்த ஏலத்துக்கு 2 ஆயிரத்து 321 கிலோ தேங்காய்களை தென்னை விவசாயிகள் கொண்டு வந்தனர். இதில் தேங்காய் ஒரு கிலோ அதிகபட்சமாக ரூ.29.36-க்கும், குறைந்தபட்சமாக 23.19-க்கும், சராசரியாக ரூ.27.86-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.64 ஆயிரத்து 652-க்கு வர்த்தகம் நடந்தது. 
நேற்று நடந்த ஏலத்துக்கு 861 கிலோ தேங்காய்களை மட்டுமே விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். இதில் ஒரு கிலோ அதிகபட்சமாக ரூ.29.80-க்கும், குறைந்தபட்சமாக ரூ.24.85-க்கும், சராசரியாக ரூ.26-க்கும் ஏலம் நடந்தது. மொத்தம் ரூ.22 ஆயிரத்து 764-க்கு தேங்காய் விற்பனை நடந்தது.

Next Story