சேந்தமங்கலம் அருகே வாகனத்தில் அடிபட்ட மயிலுக்கு சிகிச்சை


சேந்தமங்கலம் அருகே வாகனத்தில் அடிபட்ட மயிலுக்கு சிகிச்சை
x
தினத்தந்தி 8 March 2022 11:02 PM IST (Updated: 8 March 2022 11:02 PM IST)
t-max-icont-min-icon

சேந்தமங்கலம் அருகே வாகனத்தில் அடிபட்ட மயிலுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

சேந்தமங்கலம்:
சேந்தமங்கலம் அருகே செல்லப்பம்பட்டி ஊராட்சி பகுதியில் முனியப்பன் கோவில் உள்ளது. இந்த கோவில் அருகே சாலையில், வாகனத்தில் அடிபட்ட நிலையில் பெண் மயில் ஒன்று கிடந்தது. அப்போது அந்த வழியாக சென்ற புதுச்சத்திரம் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் திவாகர், ஊராட்சி செயலாளர் சேகர் ஆகியோர், நாமக்கல் வனச்சரகர் பெருமாளுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அவர் சாலையில் அடிபட்டு கிடந்த மயிலை மீட்டார். பின்னர் கால்நடை மருத்துவமனையில் மயிலுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து அந்த பெண் மயில் நாமக்கல் அருகே உள்ள சர்வமலை காட்டில் பாதுகாப்பாக விடப்பட்டது.

Next Story