மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் வீடு கேட்டு நரிக்குறவர்கள் மனு அளித்தனர்
மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் வீடு கேட்டு நரிக்குறவர்கள் மனு அளித்தனர்.
ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து நிலப்பட்டா, பட்டா மாறுதல், இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, கூட்டுறவு கடன், தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார்பாக வீடுகள், குடிநீர் வசதி, வேலைவாய்ப்பு வேண்டுதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக பொதுமக்கள் மனு அளித்தனர். மொத்தம் 238 மனுக்கள் பெறப்பட்டது. அந்த மனுக்கள் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி உரிய விசாரணை மேற்கொண்டு தகுதியானதாக இருப்பின் உடனடியாக நடவடிக்கை எடுக்கவும், மனு நிராகரிப்பிற்கான காரணங்களை மனுதாரர்களுக்கு தெரிவித்திட கலெக்டர் உத்தரவிட்டார்.
கூட்டத்தில், கலவை அத்தியானம் பகுதியைச் சேர்ந்த நரிக்குறவர்கள் தங்களுக்கு வீடு கட்டித் தரவேண்டும் என கோரிக்கை மனு அளித்தனர். மாவட்ட வருவாய் அலுவலர் முஹம்மது அஸ்லம், துணை கலெக்டர் தாரகேஸ்வரி, இளவரசி, சேகர், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சரவணகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story