கிருத்திகையை முன்னிட்டு கோலப்பாறை பாலதண்டாயுதபாணி சாமிக்கு சிறப்பு பூஜை


கிருத்திகையை முன்னிட்டு கோலப்பாறை பாலதண்டாயுதபாணி சாமிக்கு சிறப்பு பூஜை
x
தினத்தந்தி 8 March 2022 11:11 PM IST (Updated: 8 March 2022 11:11 PM IST)
t-max-icont-min-icon

கிருத்திகையை முன்னிட்டு கோலப்பாறை பாலதண்டாயுதபாணி சாமிக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.


திருக்கோவிலூர்,

திருக்கோவிலூர் அருகே கோலப்பாறை கிராமத்தில் உள்ள மலை மீது பிரசித்தி பெற்ற பால தண்டாயுதபாணி சாமி கோவில் அமைந்துள்ளது. மாசி மாத சஷ்டி மற்றும் கிருத்திகையை முன்னிட்டு நேற்று காலை முதல் பாலதண்டாயுதபாணி சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று, சிறப்பு அலங்காரத்தில் சுவாமி அருள்பாலித்தார்.

காலையில் தொடங்கி, மாலை 6 மணி வரைக்கும் நடைபெற்ற சிறப்பு பூஜையில்  திருக்கோவிலூர் மற்றும் அதைச சுற்றிலும் உள்ள பல்வேறு கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

கோவிலுக்கு வந்த பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.

Next Story