100 ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி அழுகின
திருமருகல் வட்டார பகுதியில் தொடர் மழையால் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த 100 ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி அழுகி விட்டன. பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்
திட்டச்சேரி:
திருமருகல் வட்டார பகுதியில் தொடர் மழையால் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த 100 ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி அழுகி விட்டன. பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நெற்பயிர்கள் அழுகின
திருமருகல் வட்டாரத்தில் 25 ஆயிரம் ஏக்கரில் சம்பா, தாளடி சாகுபடி செய்யப்பட்டது. சம்பா அறுவடை பணிகள் முழுமையாக முடிவடைந்த நிலையில் தாளடி அறுவடை பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக பெய்த தொடர் மழையால் கீழப்பூதனூர், திருச்செங்காட்டங்குடி, திருமருகல், திருக்கண்ணபுரம், திருப்புகலூர், வடகரை, கோட்டூர், விற்குடி, அம்பல், பொறக்குடி, மருங்கூர், திட்டச்சேரி, குத்தாலம், நரிமணம், கோபுராஜபுரம் உள்ளிட்ட பகுதிகளில் 100 ஏக்கரில் தாளடி சாகுபடி செய்த வயல்களில் மழைநீர் தேங்கி நெற்பயிர்கள் மூழ்கி அழுகி விட்டது. இதனால் துர்நாற்றம் வீசி வருகிறது.
நிவாரணம் வழங்க வேண்டும்
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில் கடந்த மாதம் பெய்த மழையினால் பாதிக்கப்பட்ட பயிர்களை காப்பாற்றிய நிலையில் மீண்டும் கடந்த 2 நாட்களாக பெய்த மழையால் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி அழுகி முளைக்க தொடங்கி விட்டன.
மழை காரணமாக 2 முறை நடவு செய்து ஏக்கருக்கு ரூ.25 ஆயிரத்திற்கு மேல் செலவு செய்து பயிர்கள் நான்கு வளர்ந்து அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த போது பெய்த மழையால் பயிர்கள் அழுகியதால் பெரும் நஷ்டம் ஏற்படும். எனவே மழையால் பாதிக்கப்பட்ட வயல்களை முறைப்படி கணக்கெடுத்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றனர்.
Related Tags :
Next Story