கோவில் பூட்டை உடைத்து தங்கம், வெள்ளி பொருட்களை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
கோவில் பூட்டை உடைத்து தங்கம், வெள்ளி பொருட்கள் திருட்டு
அருப்புக்கோட்டை,
அருப்புக்கோட்டை அருகே கோவில் பூட்டை உடைத்து தங்கம், வெள்ளி பொருட்களை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
விஸ்வநாதசாமி கோவில்
அருப்புக்கோட்டை அருகே பாளையம்பட்டியில் மதுரை சாலையில் பழைமை வாய்ந்த விஸ்வநாத சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். இந்த கோவில் பூசாரியாக பாலமுருகன் என்பவர் உள்ளார்.
இந்தநிலையில் பூசாரி வழக்கம் போல் நேற்றுமுன்தினம் இரவு கோவிலை பூட்டிவிட்டு சாவியை கோவில் தலைவர் முத்துக்கனியிடம் ஒப்படைத்துவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர் மீண்டும் நேற்று காலை கோவிலை திறக்கவந்த போது கோவில் கதவுகளில் இருந்த பூட்டுகள் உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பூசாரி கோவில் உள்ளே சென்று பார்த்தார்.
திருட்டு
அங்கு பீரோ உடைக்கப்பட்டு அதன் உள்ளே இருந்த 2 கிராம் எடை கொண்ட தங்கத்தாலி மற்றும் வெள்ளிப்பொருட்களை காணவில்லை. அதனை மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். ேமலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து கோவிலில் திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பும் இதே கோவிலில் கோபுர கலசங்கள் திருடுபோனது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story