வாடகை பாக்கி தராத ஓட்டலுக்கு சீல் வைக்கப்பட்டது.
ஓட்டலுக்கு சீல்
அருப்புக்கோட்டை,
அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு பாத்தியப்பட்ட மீனாட்சி சொக்கநாதர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலை சுற்றி கோவிலுக்கு சொந்தமான 10-க்கும் மேற்பட்ட கடைகள், ஓட்டல்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் செயல்பட்டு வரும் தனியார் ஓட்டல் ரூ.2 லட்சம் வரை வாடகை பாக்கி வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து பலமுறை ஓட்டல் உரிமையாளருக்கு அறநிலையத்துறை அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பியும் எந்தவித பதிலும் இல்லை என தெரிகிறது. ஓட்டல் செயல்படாமல் மூடியே கிடந்தது. இதனையடுத்து இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் பாஸ்கரன் முன்னிலையில், கோவில் செயல் அலுவலர் தேவி மேற்பார்வையில் அறநிலையத்துறை அதிகாரிகள் வாடகை பாக்கி தராத ஓட்டலுக்கு சீல் வைத்து நடவடிக்கை மேற்கொண்டனர். மேலும் இதே போல் பல கடைகள் வாடகை பாக்கி வைத்துள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் வாடகை பாக்கி வழங்கவில்லை எனில் வாடகை தராத கடைகளுக்கும் சீல் வைக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்தனர்.
Related Tags :
Next Story