மகளிர் தினத்தையொட்டி அரசு பெண்கள் கல்லூரியில் கலைநிகழ்ச்சி
மகளிர் தினத்தையொட்டி அரசு பெண்கள் கல்லூரியில் கலைநிகழ்ச்சி நடைபெற்றது.
நாமக்கல்:
நாமக்கல்லில் திருச்சி சாலையில் கவிஞர் ராமலிங்கம் அரசு பெண்கள் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு நேற்று கல்லூரி பேரவை தொடக்கவிழா மற்றும் மகளிர் தினவிழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு கல்லூரி முதல்வர் (பொறுப்பு) பாரதி தலைமை தாங்கினார். இதில் சிறப்பு அழைப்பாளராக கல்லூரியின் முன்னாள் முதல்வர் கிரெட்டா மேரி தென்றல் கலந்து கொண்டு, பேரவையை தொடங்கி வைத்து பேசினார்.
தொடர்ந்து பேரவை உறுப்பினர்களாக இளநிலை மாணவிகள் கார்த்திகா, பொன்னி, மேகலா, மணிமாலதி, பிரியதர்ஷினி, கலையரசி, கீர்த்தனா, பவித்ரா கமலினி ஆகியோரும், முதுநிலை மாணவிகள் சவுமியா, மீனா ஆகியோரும் பொறுப்பேற்று கொண்டனர். தொடர்ந்து மகளிர் தின கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் மாணவிகள் நடனமாடி அசத்தினர்.
Related Tags :
Next Story