நாமகிரிப்பேட்டையில் ரூ.30 லட்சத்துக்கு மஞ்சள் ஏலம்
நாமகிரிப்பேட்டையில் ரூ.30 லட்சத்துக்கு மஞ்சள் ஏலம் போனது.
ராசிபுரம்:
மஞ்சள் ஏலம்
ராசிபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் கிளை வளாகம் நாமகிரிப்பேட்டையில் உள்ளது. இங்கு ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமைகளில் மஞ்சள் ஏலம் நடைபெற்று வருகிறது. நேற்று வழக்கம்போல் மஞ்சள் ஏலம் நடந்தது. இதில் நாமகிரிப்பேட்டை, அரியாக்கவுண்டம்பட்டி, ஒடுவன்குறிச்சி, தொப்பப்பட்டி, புதுப்பட்டி, நாமகிரிப்பேட்டை, மெட்டாலா, முள்ளுக்குறிச்சி, பேளுக்குறிச்சி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் மஞ்சளை ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தனர்.
ரூ.30 லட்சத்துக்கு விற்பனை
ஒடுவன்குறிச்சி, நாமகிரிப்பேட்டை, ஈரோடு, சேலம், ஆத்தூர் போன்ற பல்வேறு இடங்களில் இருந்து வந்த வியாபாரிகள் மஞ்சளை போட்டிபோட்டு ஏலம் எடுத்தனர். விரலி ரகம் 400 மூட்டைகளும், உருண்டை ரகம் 150 மூட்டைகளும், பனங்காளி ரகம் 75 மூட்டைகளும் கொண்டு வரப்பட்டு இருந்தன.
இதில் விரலி ரகம் ஒரு குவிண்டால் குறைந்தபட்சமாக ரூ.7 ஆயிரத்து 199-க்கும், அதிகபட்சமாக ரூ.9 ஆயிரத்து 602-க்கும், உருண்டை ரகம் ஒரு குவிண்டால் குறைந்தபட்சமாக ரூ.6 ஆயிரத்து 455-க்கும், அதிகப்பட்சமாக ரூ.7 ஆயிரத்து 355-க்கும், பனங்காளி ரகம் ஒரு குவிண்டால் குறைந்தபட்சமாக ரூ.10 ஆயிரத்து 2-க்கும், அதிகப்பட்சமாக ரூ.19 ஆயிரத்து 469-க்கும் ஏலம் போனது. மொத்தம் 625 மூட்டை மஞ்சள் ரூ.30 லட்சத்துக்கு விற்பனையானது.
Related Tags :
Next Story