மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல்


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல்
x
தினத்தந்தி 8 March 2022 11:57 PM IST (Updated: 8 March 2022 11:57 PM IST)
t-max-icont-min-icon

மயிலாடுதுறை அருகே காவிரி ஆற்று பாலத்தை விரைந்து கட்டி முடிக்கக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பூம்புகார்-கல்லணை சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மயிலாடுதுறை:
மயிலாடுதுறை அருகே காவிரி ஆற்று பாலத்தை விரைந்து கட்டி முடிக்கக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பூம்புகார்-கல்லணை சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சாலை மறியல்
மயிலாடுதுறை அருகே மாப்படுகை அண்ணா சிலை முன்பு தாமதமாக நடைபெற்று வரும் சோழம்பேட்டை-மூவலூர் இணைப்பு காவிரி பாலப்பணியை உடனே கட்டி முடிக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மற்றும் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்திற்கு கிளை செயலாளர் ராமதாஸ் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட செயலாளர் சீனிவாசன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் துரைராஜ், ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன், மாவட்டக்குழு உறுப்பினர் மேகநாதன், இயற்கை விவசாயி ராமலிங்கம், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கார்த்திகேயன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கோஷங்கள் 
போராட்டத்தின் போது கும்பகோணம் சாலை - கல்லணை சாலை ஆகியவற்றை இணைக்கும் வகையில் உள்ள மூவலூர்- சோழம்பேட்டை சாலையின் குறுக்கே காவிரியாற்றின் மீது ரூ.3 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் புதிய பாலம் கட்டும் பணி கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. 
அந்த பணி தற்போது வரை பணி மந்தமாக நடைபெற்று வருவதால் போக்குவரத்து தடைபட்டு பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர், அந்த பணியை விரைந்து முடிக்கக்கோரி கோஷங்கள் எழுப்பினர்.
1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
இதுபற்றி தகவல் அறிந்த மயிலாடுதுறை போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம், பொதுப்பணித்துறையில் ஊரக சாலை உதவி கோட்ட பொறியாளர் பாலசுப்ரமணியன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பேச்சு வார்த்தை நடத்தினர்.
 இதில் உடன்பாடு ஏற்பட போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் பூம்புகார் - கல்லணை சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story