ரத்தனகிரி அருகே வேன் உரிமையாளர் விஷம் குடித்து தற்கொலை


ரத்தனகிரி அருகே வேன் உரிமையாளர் விஷம் குடித்து தற்கொலை
x
தினத்தந்தி 8 March 2022 11:59 PM IST (Updated: 8 March 2022 11:59 PM IST)
t-max-icont-min-icon

ரத்தனகிரி அருகே வேன் உரிமையாளர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.

ஆற்காடு

ராணிப்பேட்டை மாவட்டம் ரத்தனகிரியை அடுத்த கீழ்மின்னல் பகுதியைச் சேர்ந்தவர் குமார் (வயது 50). வேன் உரிமையாளர். இவரது மனைவி சாந்தி. குமார் தனது வேனை ரிப்பேர் சரி செய்வதற்காக ராணிப்பேட்டை வி.சி. மோட்டூர் பகுதியிலுள்ள மெக்கானிக் கடையில் நிறுத்தியுள்ளார். வேனை சரிபார்த்து அதற்கு உண்டான கூலி வழங்குவதற்கு வெளியில் கடன் வாங்கியுள்ளார்.

இதனால் குமாருக்கும், அவரது மனைவி சாந்திக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. கடந்த மாதம் 21-ந் தேதி வேனை சரிசெய்து எடுத்து வருவதற்காக ராணிப்பேட்டை அருகே உள்ள வி. சி.மோட்டூர் செல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளார். பின்னர் வீடு திரும்பவில்லை. 
இந்தநிலையில் ரத்தினகிரியை அடுத்த குளம் அருகே குமார் விஷம் குடித்து மயங்கி கிடப்பதாக அவரது மனைவி சாந்திக்கு தகவல் தெரிவித்துள்ளனர். ஆபத்தான நிலையில் இருந்த அவரை மீட்டு வேலூர் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

 இதனைத்தொடர்ந்து குமார் நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் ரத்தினகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story